• Jul 24 2025

பலமுறை கெஞ்சிய மாவீரன்; ஆனா எந்தப் பருப்பும் வேகவில்லை! ப்ளூ சட்டை மாறனின் புது ட்வீட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இமான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.

இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், 'இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். வரும் காலங்களில் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும். என் வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், வலிகளுக்கு சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய காரணம். அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியதால், அவர் செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.' எனத் தெரிவித்திருந்தார். இது குறித்த பேச்சு தான் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது.


இவ்வாறான நிலையில், டி.இமான் வைத்த குற்றச்சாட்டை அடுத்து சிவகார்த்திகேயனை செம்மையாக கலாய்த்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

எனினும், குறித்த விவகாரம் தொடர்பில் சிவகார்த்திகேயன் இதுவரை மௌனம் கலைக்கவில்லை. அதேசமயம் குறித்த பேட்டி வெளியானதையடுத்து, இமானிடம் அந்த யூட்யூப் சேனலை தொடர்புகொண்டு வீடியோ டெலிட் செய்ய சொல்லும்படி  சிவகார்த்திகேயன் கெஞ்சியதாக ஒரு தகவல் அண்மையில் தீயாக பரவியது. 

ஆனால் 'சிவகார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை, அவர் இமானிடம் கெஞ்சவும் இல்லை' என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில், 'பேட்டியை நீக்கச்சொல்லி இசைமான் மற்றும் யூடூப் சேனலிடம் பலமுறை கெஞ்சிய மாவீரன். எந்த பருப்பும் வேகவில்லை. 1 மில்லியன் வியூக்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்னடா இது குடும்பங்கள் கொண்டாடும் இளவரசனுக்கு வந்த சோதனை' என குறிப்பிட்டிருக்கிறார். 

இவ்வாறு அவர் வெளியிட்ட இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement