• Jul 24 2025

மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அனுமதி

stella / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக நேற்று பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் அவருக்க தீவிர சகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனலிக்காததால் இன்று மரணமானார். இவரது இறப்பிற்கு தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் கிருஷ்ணாவின் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலர் சோமேஷ் குமாருக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பிறப்பித்துள்ளார். இதையொட்டி, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக கச்சிபோலி மைதானத்திற்கு கிருஷ்ணாவின் உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.கடந்த ஜனவரியில் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபுவும், கடந்த செப்டம்பரில் தாயார் இந்திரா தேவியும் மறைந்த நிலையில், இன்று அவரது தந்தை கிருஷ்ணா காலமாகியுள்ளார்.


ஒரே வருடத்தில் மூன்று இழப்புகளை சந்தித்துள்ள மகேஷ் பாபுவின் குடும்பம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு திரை உலகின் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement