• Jul 25 2025

தலைவரோ, தளபதியோ படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்யமாட்டாங்க- வதந்திக்கு பதிலடி கொடுத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் பல திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது.


அதிகாலை காட்சி போட தடை உட்பட பல்வேறு சிக்கல்கள் படத்திற்கு தற்போது இருந்து வருகிறது. இதனால் லியோ வசூல் சாதனை படைககுமா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

மேலும் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் லியோ திரைப்படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார். இது குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது. 

அதாவது விஜய் போன் செய்து ரஜினியின் பிஆர்ஓ-விடம் கேட்டுக்கொண்டதால் தான் ரஜினி இப்படி பேட்டி கொடுத்திருக்கிறார் என ஒரு நபர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.இதை பற்றி ரஜினியின் பிஆர்ஓ ட்விட்டரில் கோபமாகப் பதிலளித்துள்ளார்.


"இது முற்றிலும் பொய்யானது. தலைவரோ, தளபதியோ படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்ய நினைக்க கூட மாட்டார்கள். இப்படி ஒரு பொய்யான கதையை சொல்லும் முன்பு கொஞ்சம் பொறுப்புடன்இருங்க" என ரியாஸ் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement