• Jul 25 2025

விஜய் டிவியின் முக்கிய சீரியல் இந்த படத்தின் காபி..மோசமாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் இதில் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதிகண்ணம்மா.இதில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடும், பாரதி கண்ணம்மா சேர்ந்து விடுவார்கள், அதனால் சீரியலும் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நடந்தது வேறு.

பாரதிக்கு மொத்த உண்மை தெரிந்தபின்னரும் சீரியல் நீண்டுகொண்டே தான் செல்கிறது. பாரதி உடன் சேர்ந்து வாழ முடியாதென கூறிவிட்டு கண்ணம்மா இரண்டு குழந்தைகள் உடன் அவரது அப்பாவின் கிராமத்துக்கு சென்றுவிடுகிறார்.

மேலும் அவரை தேடி கண்டுபிடிக்க அலையும் பாரதியும் ஒருவழியாக அந்த கிராமத்துக்கு சென்றுவிட்டார்.



கதை இப்படி மாறும் என ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அத்தோடு கதையை முடிக்காமல் இருக்கும் இயக்குநரை நெட்டிசன்கள் தற்போது அதிகம் ட்ரோல் செய்தும் வருகின்றார்கள்.

'இயக்குநர் இப்போதான் மூவேந்தர் படம் பாத்திருப்பார் போல' என ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள், அடுத்தகட்டகதையை அந்த படத்தில் இருந்து தான் காபி அடிக்கிறார் போல எனவும் கலாய்த்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement