• Jul 26 2025

மீனாவை அந்த இடத்திற்கு வருமாறு அழைத்த ஆண் நண்பர்கள்.. சோகத்துடன் அவரே கூறிய தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

குறிப்பாக 90காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழினைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 


நடிப்பினையடுத்து திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்ட மீனாவிற்கு நைனிகா என்ற மகள் ஒருவர் இருக்கின்றார். ஆனாலும் எதிர்பாராத விதமாக மீனாவின் கணவர் கடந்தாண்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மீனா பல வதந்திகள் சிக்கிய வண்ணம் இருக்கின்றார்.


அதாவது மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக அடிக்கடி வதந்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் மீனா தனுஷை இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக கூறி சினிமா விமர்சகர் பயில்வான் கூடி பகீர் கிளப்பி இருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பங்கேற்ற மீனா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் " நான் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த போது எனக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்கள். அந்த காலகட்டத்தில் பார்ட்டி, பப் கலாச்சாரம் தொடங்கியது. அப்போது என் நண்பர்கள் பப்க்கு என்னை அழைப்பார்கள். ஆனால் என்னுடைய அம்மா அதற்கெல்லாம் அனுமதி தரவில்லை" என்று மீனா மிகவும் சோகமாக கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement