• Jul 26 2025

என்னை பார்த்து அந்த ஆளு அப்படி கேட்டுட்டாரே: கதறி அழுத பிரபல டிவி நடிகை...அவரே கூறிய விசயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காஸ்டிங் டைரக்டர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டதால் தான் தேம்பித் தேம்பி அழுததாக நடிகை காவேரி பிரியம்  கூறியுள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் காவேரி பிரியம். அவர் தன் கெரியர் பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்ததாவது...

சிறு வயதிலிருந்தே நடிப்பு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வந்தேன். பல ஆடிஷன்களில் நிராகரிக்கப்பட்டேன்.

வெளியூரில் இருந்து வந்து மும்பையில் தாக்குப்பிடிப்பது கடினம். அத்தோடு என்னை வழிநடத்த காட்ஃபாதர் யாரும் இல்லை. இந்நிலையில் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற குறுக்கு வழியில் செல்லுமாறு சிலர் சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.



அத்தோடு காஸ்டிங் டைரக்டர் ஒருவர் என்னிடம் அசிங்கமான ப்ரொபோஸலை கொண்டு வந்தார். அதன் பின்னர் நான் தேம்பித் தேம்பி அழுதேன். ரிக்ஷாவில் அமர்ந்து அழுதேன்.

நடிகையாகும் ஆசையில் அனைத்தையும் விட்டுவிட்டு மும்பைக்கு வந்தால் இப்படி செய்கிறார்களே என அழுதேன். திறமைக்கு மதிப்பே இல்லையா என்று தோன்றியது. இன்னும் சில நேரங்களில் பிரேக் வேண்டுமானால் பெரும் தொகை கொடுக்க வேண்டும் என்றார்கள்.

எனினும் இதையடுத்து என் குடும்பத்தாரிடம் சொன்னேன். அவர்கள் தான் என்னை தேற்றினார்கள். பின்னர் சில நல்லவர்களை சந்தித்தேன். அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள் என்றார்.

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் அதிகம் இருக்கிறது என்று சில பிரபல நடிகைகளே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த பழக்கம் சின்னத்திரையிலும் உள்ளது என்று கூறினார் காவேரி.




Advertisement

Advertisement