• Sep 09 2025

வலுக்கட்டாயமாகக் கையைப் பிடித்த நபர்- தமன்னா செய்த காரியம்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்தும் தனக்கென தனி தனி மொழி ரசிகர்களை ஒன்றாக சேகரித்திருக்கிறார்.இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது.


மேலும் அடுத்து தமன்னா அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி-யில் ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகின்றது. மேலும் இவர் பிரபல பாலிவூட் நடிகர் விஜய்வர்மாவைக் காதலித்தும் வருகின்றார்.


விரைவில் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில் தமன்னா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஒருநபர் பாதுகாவலர்களை தாண்டி வந்து அவரது கையைப் பிடித்துள்ளார்.

அவரை காவலர்கள் பிடித்து வெளியில் அனுப்ப, தமன்னா அவர்களை தடுத்து அந்த இளைஞருக்கு கைகொடுத்து அதன் பின் செல்பி எடுத்து கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement