• Jul 25 2025

மும்பை விமான நிலையத்தில் ஸ்ருதிஹாசனை மிரட்டிய நபர்- இறுதியில் என்ன நடந்திச்சு தெரியுமா?- அவரே கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. ஸ்ருதி ஹாசன் சந்தனு என்பவருடன் லிவிங் டுகெதரீல் வாழ்ந்து வருகிறார்.அவ்வப்போது தன் காதலுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.


இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன்,தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் மும்பை விமான நிலையம் சென்ற போது ஒரு நபர் என்னை பின் தொடர்ந்து வருவதை நான் பார்த்தேன். அவர் யார் என்று கூட தெரியாது.

அவர் எனக்கு நெருக்கமாக வந்ததால் அசவுகரியமாக இருந்தது. அங்கு இருந்து வேகமாக சென்று காரில் ஏறுவது வரை தொடர்ந்து வந்தார்.

அப்போது நான், நீங்கள் யார் என்று சத்தமாக கேட்டேன். உடனே அங்கு இருந்து நழுவி சென்று விட்டார். நான் பாடிகார்டு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement