• Jul 24 2025

ஜோடிப் பொருத்தம் ரொம்ப சூப்பராக இருக்கே- பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுடன் கியூட்டான புகைப்படத்தை வெளியிட்ட விஜே தீபிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் விஜே தீபிகா. இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது. இருப்பினும் இவர் தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார்.

மேலும் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதற்கு அவரது முகப்பரு தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தனக்கு இருந்த முகப்பரு பிரச்சனையை சரி செய்து விட்டு அழகில் ஜொலிக்கிறார் தீபிகா.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு தொடர்ந்து பல சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து விட்டார். சித்திரம் பேசுதடி, சில்லுன்னு ஒரு காதல் என இவர் நடித்த சீரியல்களில் செம்ம க்யூட்டான தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

 தனியாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ள தீபிகா அதில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் நெருங்கிய நண்பர் தான் கண்ணன் என்று அழைக்கப்படும் சரவண விக்ரம்.

இந்நிலையில் தீபிகாவும் சரவண விக்ரமும் சேர்ந்து இன்ஸ்டாவை தெறிக்க விடுகின்றனர். வித விதமான ஃபோட்டோஷூட், ஆல்பம் பாடல், ஷார்ட் பிலிம், ஷார்ட்ஸ் என இவர்களின் காம்போ பயங்கர ஹிட் அடித்துள்ளது. சமீபத்தில் இருவரும் வீட்டு மாடியில் நடத்திய ஃபோட்டோ ஷூட் படங்கள் லைக்ஸ்களை அள்ளியுள்ளது.


இந்த ஜோடியை செம்ம ஜோடி என ரசிகர்கள் புகழ்கின்றனர். அதே போல்  இருவரும் காதலிக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஆனால் இந்த கேள்விக்கு தீபிகா ஏற்கெனவே விளக்கம் அளித்து இருந்தார். அன்றும், இன்றும், என்றுமே சரவண விக்ரம் என நண்பன் தான், அது எப்பவும் மாறாது எனவும் கூறி இருந்தார்.



Advertisement

Advertisement