• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் வந்த பணப்பெட்டி...101வது நாளில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த வீட்டிற்குள் பல சண்டை, சச்சரவுகள், எமோஷனலான தருணங்கள் என நிறைய பார்த்து விட்டது.அதில் யார் டைட்டிலை வெல்லப்போகின்றார் என ரசிகர்கள் பலரும் காத்துக்கிடக்கிறார்கள்.இந்நிலையில் 101வது நாள் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

வழமை போல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் புதிய டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதாவது வீட்டில் இருப்பவர்களிடம் யாருடன் அதிக நட்பை பேண விரும்புகிறீர்கள் என கேட்கப்படுகின்றது.அதன்படியோ எல்லோரும் மாறி மாறி இவருடன் தான் நட்பை பேண விரும்புகின்றேன் என கொடுக்கப்படுகின்றது.

அதில் அதிக பேர் அசீமுடனும் விக்ரமனுடம் நட்பை பேண விரும்புவதாக கூறி பாண்டை கட்டிவிட்டார்கள்.அதற்கு பிறகு தனலட்சுமிக்கும் மணிகண்டனுக்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நேரம் முடவடைந்து விட்டதும் என்றும் அவர்களை மெயின் டோர் வழியாக வெளியேறுமாறு பிக்பாஸ் அறிவித்த நிலையில் இருவரும் வெளியேறினார்கள்.


அதன் பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த முறை மட்டும் இரண்டு முறை பணப்பெட்டி கொண்டு வரப்பட்டது.அதாவது முதல் பணமூட்டை கொண்டு வரப்பட்டு அதை கதிரவன் எடுத்திட்டு வெளியில் சென்றார்.தற்போது பணப்பெட்டி வந்தது.ஆரமப் தொகையாக 3லட்சம் வைக்கப்பட்டது.அதை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை.பின் அது 5லட்சமாக எகிறியது.அதன் போதும் ஒருவரும் எடுத்துக்கொள்ளாமால் அதைப் பற்றி யோசித்து கொண்டு இருந்தார்கள்.


அதன்  ஒரு சின்னதாக புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது.அதாவது  கண்ணைக்கட்டி கொண்டு ஒவ்வொருத்தராய் அவர்களின் தலையை தொட்டு கண்டு பிடிக்கனும் அப்படி எல்லோரும் வளையாடிக் கொண்டிருந்தார்கள்.இத்துடன் 101வது நாள் இனிதே நிறைவேறியது.


Advertisement

Advertisement