• Jul 25 2025

இவர் அரசியலில் மிக முக்கியமானவர்... ரகசியத்தை போட்டு உடைத்த தம்பி ராமையா...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தம்பி ராமையா அவர்கள் ஒரு நிகழ்வின் போது இவ்வாறு பேசி இருந்தார் "1965 தொடக்கம் 1980 ஆகிய 15 வருட காலத்திற்குள் ஜெயலலிதா அம்மா இல்லாமல் தென்னிந்திய சினிமாவை பார்க்கமுடியாது". 


அதேபோல் 1982ல் அம்மா அவர்கள் இந்திய அண்ணாத்துரை முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்து கொண்டதற்கு பிறகு 1982ல் இருந்து 2016ல் அவரை காலம் கொண்டு செல்லும் வரை இந்திய அரசியலில் அவரை தள்ளி வைத்து பார்க்க முடியாது. 


சினிமாவிலும் அரசியலிலும் ஒரு பெண்ணாக பிறந்து ஜாம்பவானாக திகழ்ந்தார். இவரின் நேரடியான வாரிசு தீபக் அவர்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.


தியாகராஜ பாகவர் ஐயா, எம்.ஜி.ஆர், கமல்காசன் மற்றும் அஜித் இவர்கள் அத்தனை பேரையும் இணைத்தால் வரும் உருவமே அரவிந்த்சாமி ஐயா அவர்கள். எம்.ஜி.ஆர் வேடத்திற்கு இவரை விட வேறு யாருமே பொருத்தமுடியாது. ஒரு கதைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்வார்.


இந்த கதையை உருவாக்கியவர்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த கதையை மக்களுக்கு எடுத்து சென்ற ஆளுமை, அறிவு கொண்டவர்களுக்கும் நன்றி. மேலும் இசையை வடிவமைத்து கொடுத்த ஜி.வி.பிரகாஷிற்கு நன்றி என்று கூறினார்.


Advertisement

Advertisement