• Jul 25 2025

கமல்ஹாசன் வீட்டுக்கு வந்த புதுவரவு...அட யார்னு பாருங்க...வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனது இளமையான நடிப்பினாலும் அழகினாலும் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பதோடு முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்பொழுதும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து  கொடிகட்டி பறந்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் வேற லெவலிலும் அள்ளிக் குவித்தது. 

இவர்  தற்சமயத்தில் மிக மிக பிஸியான நடிகர் என்று கூறலாம். பிக் பாஸ் ஷோ, இந்தியன் 2 பட ஷூட்டிங், அரசியல் கட்சி வேலைகள் என பிசியாக இருந்து வருகிறார்.


அத்தோடு அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக அவர் தயாரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கமல் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது. கமல் அவரது கையில் நாய்க்குட்டியை வைத்து இருக்கும் போட்டோ தான் அது.

"My #doggybag" என அவர் குறிப்பிட்டு இருக்கும் நிலையில், 'கியூட்' என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement