• Jul 25 2025

பிரமாண்ட காட்சிகளுடன் வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் புதிய ட்ரைலர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலக சினிமா வரலாற்றில் இன்றும் பலராலும் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது 'டைட்டானிக்'. இப்படத்தின் வாயிலாக கோடிக்கணக்கான உலக ரசிகர்களை ஈர்த்த ஜேம்ஸ் கேமரூன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய 'அவதார்' திரைப்படம் ஆனது கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. 


அத்தோடு சினிமா வாழ்வின் ஒரு சகாப்தம் என்று 'அவதார்' படத்தை பெருமையுடன் படத்தை கூறிக் கொள்ளலாம். அதாவது மொத்த ரசிகர்களையும்  ஒரு சேரக் கட்டி இழுத்த அனிமேஷன் படமான அவதார் உலகில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றிருக்கின்றது. 

அதுமட்டுமல்லாது இந்த படம் ஆனது அமெரிக்க மதிப்பில் 2500 மில்லியன் டாலர்களை வசூல் செய்து அசத்தி இருந்தது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் அப்பொழுதே இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பையும் ரசிகர்களுக்கு வெளியிட்டு விட்டார். ஆனால் இந்த இரண்டாம் பாகம் உருவாக ஏறத்தாள 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.


இந்நிலையில் சிறுவயதில் பார்த்த அவதார் முதல் பாகத்தின் அடுத்த பாகத்தையும் பார்க்க இன்றைய ரசிகர்கள் வெகுவான எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அந்தவகையில் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அவதார் இரண்டிற்கான அப்டேட்டும்  அதன் புதிய பெயரும் வெளியாகி இருந்தது. அதன்படி இந்த பாகத்திற்கு 'தி வாட்டர் ஆஃபி வே ' என த்ரில்லிங்காக பெயரிடப்பட்டுள்ளது. 

முந்தைய பாகத்தில் முழுவதுமாக ஒரு மேஜிக் வனத்திற்குள் அனைத்தும் நடப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் பாகத்தில்  கடற்கரை மற்றும் கடலுக்குள் நடக்கும் காட்சியாகவும் , கடல் விலங்குகளை வைத்து நடக்கும் சம்பவங்களை கொண்டதாகவும் அமோகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. 


இந்நிலையில் தற்போது இதன் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றது.


Advertisement

Advertisement