• Jul 25 2025

தொகுப்பாளினி ரம்யாவின் சொத்து மதிப்பு பற்றி வெளியான தகவல்-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சூப்பராகவும் கலகலப்பாகவும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கக் கூடிய பல தொகுப்பாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் விஜய்டிவியில் உள்ள தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் தான் தொகுப்பாளினி ரம்யா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை  தன் பாணியில் தொகுத்து வழங்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதைத்தாண்டி ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை ஆகிய படங்களிலும் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.



சினிமாவை தாண்டி பலூ  போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார், உடற் பயிற்சி குறித்து  தனது ரசிகர்களுக்கு நிறைய விஷயங்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.

மேலும் இப்படி பல விஷயங்களில் தனது நாட்டத்தை காட்டி வரும் ரம்யாவின் சொத்து மதிப்பு மட்டும் 1ல் இருந்து 2 மில்லியன் டாலர் இருக்கும் என்று கூறுகின்றனர்.



Advertisement

Advertisement