• Jul 23 2025

தல அப்படி பட்டவர் இல்லை... தவறாக புரிந்து கொண்ட பிரபலம்... நடிகர் அஜித் குறித்து வைரலாகும் செய்தி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தல அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். ஆனால் அது வெறும் தகவலாகவே மட்டுமே கடந்த மாதம் வரை இழுபறியாக இழுத்தடித்தது. எப்பொழுது தான் விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நாலா பக்கமும் அஜித்தை பற்றி கேள்விக்குறியை முன்வைத்து வந்தார்கள்.

இதற்கிடையில் அஜித்தின் 62 ஆவது படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என்று  தகவல் வந்திருந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் செய்த குளறுபடியினால் அஜித் இவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்தார். அந்த வகையில் கடைசி நிமிடம் வரை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது.


அஜித் நடிக்க போகும் 63 வது படத்திற்கு இயக்குனரை கமிட் பண்ணி இருக்கிறார். அதற்காக அஜித்தே நேரடியாக ஆதிக்கு போன் பண்ணி ஒன் லைன் ஸ்டோரியை கேட்டிருக்கிறார். உடனே அஜித்தும் கமிட் ஆகிவிட்டார். ஆனால் அந்த டைம் விஷாலை வைத்து ஆதிக், மார்க் ஆண்டனி படத்தை எடுக்கிறார் என்று அஜித் கேள்விப்பட்டிருக்கிறார்.


இப்போதைக்கு ஆதிக்கை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று விலகி விட்டார். ஆனால் இது தெரியாமல் அஜித்தை பற்றி தவறாக புரிந்து கொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன். அதற்கு காரணம் என்னவென்றால் விக்னேஷ் சிவனை அஜித் வேண்டாம் என்று சொன்னதனால் ஆதிக்கையும் அவாய்ட் பண்ணி விட்டார் என்று தவறாக நினைத்துக் கொண்டார்.


ஆனால் அஜித் நினைத்தது என்னவென்றால் ஆதிக் எடுக்கக்கூடிய படம் சக்சஸ் ஆக வேண்டும் அதுவரை எந்தவித தொந்தரவும் பண்ண வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். இது புரியாமல் அஜித் நம்மளை ரிஜெக்ட் செய்து விட்டார் என்று மிகவும் மன வேதனையில் ஆதிக் தவித்து வந்திருக்கிறார். அதன் பிறகு மார்க் ஆண்டனி படம் ரிலீஸ் ஆனதும் அஜித் மறுபடியும் இவருக்கு போன் பண்ணி இருக்கிறார்.


அதில் படம் நன்றாக இருக்கிறது எனக்கும் டைம் டிராவல் கதை என்றால் ரொம்பவே பிடிக்கும் படத்தை நல்லா எடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டி இருக்கிறார். அத்துடன் என்னுடைய 63வது படத்திற்கும் நீங்கள்தான் இயக்குனர் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அதன் பின்னரே ஆதிக் பெரும் நிம்மதி அடைந்து அஜித்தை பற்றி புரிந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

Advertisement