• Jul 25 2025

விஜயகுமார் வீட்டில் பேரிடியாய் விழுந்த மரண செய்தி! ஆழ்ந்த துயரில் தமித்திரையுலகம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகரும் விஜயகுமாரின் சம்மந்தியும், இயக்குனருமான ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலை தனது 88வது வயதில் காலமானார்.

சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தான் இயக்குநர் ஹரி  

இவரது தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன்  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 


அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் (எண் 10, ஶ்ரீநிவாசன் தெரு, பலராம் காலனி, சென்னை 93) திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்படவுள்ளது.  

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement