• Jul 26 2025

பயில்வானை வெளுத்து வாங்கிய நம்பர் நடிகை..அடடே இவருமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனல் வாயிலாக  தெரிவித்து வருகிறார்.. அதிலும் குறிப்பாக சில நடிகைகளை பற்றி மிக மோசமாக விமர்சித்து வருகிறார். இதனால் சினிமா பிரபலங்கள் மத்தியில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.


அதுமட்டுமின்றி பல பிரபலங்கள் இவரை திட்டியும் பார்த்து விட்டனர். ஆனால் எதற்கும் அஞ்சான் நெஞ்சமாக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகைகளை பற்றிய கிசுகிசுக்களை வெளியிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். எனினும் இப்போது மறைமுகமாக பயில்வனை நம்பர் நடிகை ஒருவர் வெளுத்து வாங்கி உள்ளார்.


அதாவது சில மாதங்களுக்கு முன்பு பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் நடிகை திரிஷாவை பற்றி பேசினார். அத்தோடு 40 வயதை கடந்தும் திரிஷா திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் தான் என்று பயில்வான் கூறியிருந்தார். திரிஷா குடித்துவிட்டு அக்கம் பக்கத்தினரிடம் சண்டை இடுவார்.


அவர்கள் காவல் நிலையம் வரை சென்று திரிஷா மீது புகார் கொடுத்துள்ளனர். இப்படி இருக்கையில் இப்போது திருமணம் செய்து கொண்டால் குடிப்பதற்கு தடையாகிவிடும் என்பதால் தான் திரிஷா கல்யாணத்தை தட்டிக் கழித்து வருவதாக பயில்வான்  தெரிவித்திருந்தார். இப்போது திரிஷாவின் ராங்கி படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.


இதனால் பல்வேறு ஊடகங்களுக்கு திரிஷா பேட்டி கொடுத்து வருகிறார். எனினும் அந்த வகையில் ஒரு பேட்டியில் சினிமாவில் இதுபோன்று கிசுகிசு பேசுபவர்களை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆவேசமடைந்த திரிஷா அவர்களெல்லாம் திமிரு பிடிச்சவங்க. தேவை இல்லாமல் இரண்டு நடிகர்கள் இடையே சண்டையை மூட்டிவிடுவார்கள்.


என்னைப் பற்றிய வந்த சர்ச்சைகளால் நானும் மிகுந்த மன கஷ்டத்திற்கு உள்ளானேன். அத்தோடு அவர்கள் நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, பேசாமல் இருக்கலாம். ஆனால் தேவை இல்லாமல் பொய்யான செய்தியை பரப்பி வருவதாக மறைமுகமாக பயில்வனை திரிஷா வெளுத்து வாங்கி இருந்தார்.


Advertisement

Advertisement