• Jul 25 2025

அடிக்கடி பேசப்படும் லோகேஷின் LCU - அட இதுதான் அர்த்தமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். சமீபகாலமாக இவர்களுடைய ரசிகர்களுக்கிடையில் அதிகளவான போட்டிகளும் மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் கூட படம் பார்க்க சென்ற அஜித்தின் ரசிகர் எதிர்பாராத விதமாக இறப்புக்குள்ளானார். 

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் தல, தளபதி என்று கொண்டாடித் தான் வருகின்றார்கள்.மேலும்  ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் வெளியாகியிருந்தது.


இப்படங்கள் இரண்டுமே 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.அதே போல அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகின்றது.

இப்படியான சூழ்நிலையில் ரசிகர்கள் சிலர் ஒரு கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.அதாவது கமல் ரஜினியைப் போல விஜய் அஜித் எப்போது ஒன்றாக மேடையில் வந்து பேசுவார்கள் என்று கேட்டு வருகின்றனர். அதற்கு பிரபல யூடியூபர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது விஜய் அஜித் இருவருக்கும் இடையில் நிலவும் போட்டி காரணமாகத் தான் இருவரும் ஒன்றாக வருவதில்லை என்றும் எதிர் காலத்தில் இருவரும் மேடைகளில் சேர்ந்து வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு என்றும் கூறியுள்ளார்.


அத்தோடு இவர்கள் இருவரினதும் மார்க்கெட் சரியும் போது இதற்கான வாய்ப்பு அமையும் என்றும் அதற்காக காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement