• Jul 26 2025

''நான் பட்ட வலி என்ர எதிரிக்கு கூட வரக்கூடாது'' - கை முறிந்த, நடிகர் விஜய் விஷ்வாவின் உருக்கமான பேச்சு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அபி சரவணன். 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் விஷ்வா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஒன்று தற்போது சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அங்கு அவர் நடிக்கும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

பைக்கில் இருந்து தாவிக் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது விஜய் விஷ்வா, எந்த டூப்பும் போடாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்தார். அப்போது எதிர்பாராமல் கீழே விழுந்ததில் விஜய் விஷ்வாவின் வலது கை முறிந்தது. இதையடுத்து வலியால் துடித்த அவரை உடனடியாக மீட்டு சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் படக்குழுவினர் சேர்ந்தனர்.

ம்ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

சிகிச்சை முடிந்து வந்த இவர் தனது உடல்நலம் குறித்து பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  அளித்துள்ளார்.

அவர் கூறுகையில் ;-''பைக்ல இருந்து கீழ விழுற மாதிரி ஒரு சீன பிளான் பண்ணி இருந்தாங்க அப்பொழுது நான் ஜம் பண்ணும்போது பேலன்ஸ் மிஸ் ஆகி கீழே விழுகிற சூழ்நிலை உருவாயிற்று. விழுந்து 2,3 மணித்தியாலங்களுக்கு பிறகு தான் ரீட்மென்ட் நடந்திச்சு.அவ்வளவு மணிநேரமும் நான் வலியால் துடிச்சத மறக்க முடியாது. காட்டுப்பகுதிக்குள்ள ஷூட்டிங் நடந்ததால ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகவே இவ்வளவு நேரம் எடுத்திருந்தது.

எல்லா படப்பிடிப்பிலும் முதலுதவி வழங்குறத்துக்கு கண்டிப்பா ஒருத்தர் இருக்கோணும். அடிப்பட்டா ஒரு பெட்ல வைச்சு தூக்கிட்டு போகோணும்னு கூட தெரியேல அந்தளவுக்கு பத்தற்றத்தில இருந்தாங்க எல்லாருமே.இது நடக்கும்னு எதிர் பாக்கல. கொஞ்சம்னா தலை அடிபட்டிருக்கும் ,கடவுள் புண்ணியத்தால தப்பிச்சன். சிறிய பட்ஜெட் படம் தான்.ஆனாலும் முதலுதவி என்ற ஒண்ட வைச்சிருக்கலாம். நான் பட்ட வலி என்ர எதிரிக்கு கூட வரக்கூடாது.அந்த 2,3மணிநேரம் என்ன நடந்திச்சுன்னே தெரியேல வெறும் கத்தல்,கதறல் தான்.

ஒரு மாசம் புல்லா பிஓபி தான்.அது மட்டும் கை அசைக்க கூடாதுன்னும்,அதுக்கப்புறம் பயிற்சி செய்யோணும்னும் டாக்டர் சொல்லியிருக்காரு.சண்டை பயிற்சியாளரும் எல்லா செட்டப்பும் சரியான்னு பாத்திருக்கோணும்,அதோட நானும் ரியஸல் பாத்திருக்கோணும்..இதில என் தப்பும் இருக்கு.

எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலா இருக்கு ஏன்னா வருகிற 4 ஆம் திகதி புதுப்பட பூஜை,அடுத்த படத்தின் அக்கிறிமென்ட் இருக்கு ,இப்போ தான் 3 படம் கமிட்டாகிச்சு,ஷூட்டிங் இருக்கு,கைல படம் இருக்கு,ஆனா போக முடியேல. இது எனக்கு மிகப்பெரிய மனஉளைச்சலா இருக்கு என்றே சொல்லலாம்.சின்ன் படங்கள் ,பெரிய படங்கள்னு பாக்காதீங்க ,எல்லாரும் ஆட்டிஸ்ட் தான் எல்லாருக்கும் சேப்ரி முக்கியம் .சேப்ரியா ஒர்க் பண்ணுங்க.எல்லாரும் கேர்புல்லா இருங்க'' என கூறினார்.

Advertisement

Advertisement