• Jul 24 2025

நான் அனுபவித்த வேதனை சொல்ல முடியாது- மகன் கைது செய்யப்பட்டது குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த ஷாருக்கானின் மனைவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் ஷாருகான். இவர் தற்பொழுது இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் ஜவான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இவருடன் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகின்றார்.

இவருடைய மகனாக ஆர்யன்கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு கைது் செய்யப்பட்டு தற்பொழுது விடுதலை ஆகியுள்ளார். இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து முதல் முறையாக ஷாருக்கானின் மனைவி  கருத்து தெரிவித்துள்ளார். 


அவர் இதுகுறித்து கூறிய போது, ‘ஒரு பெற்றோராக நாங்கள் ஆரியன் கைது செய்யப்பட்டபோது அனுபவித்த சோகங்கள் வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது. அதிலும்  ஒரு அம்மாவாக நான் அனுபவித்தது யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள் 

இன்று நாங்கள் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் நேசித்தபடி வாழ்ந்து வருகிறோம். இந்த துயர் மிகுந்த காலம் எல்லோர் மீதும் அன்பு செலுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது

எங்கள் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பலர் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அந்த வகையில் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்ததக்கது.

 

Advertisement

Advertisement