• Jul 26 2025

சீரியலில் பிரிந்தாலும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான சிஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இரவு நேரத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை எடுத்துக் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் 3 வருடங்களுக்கு மேலாக இந்த சீரியல் ஓடிக் கொண்டிருந்தாலும் ரி ஆர் பியிலும் முன்னணியில் காணப்படுகின்றது.

மேலும் ஒற்றுமையாக இருந்த சகோதர்கள் தற்போது பிரிவைச் சந்தித்துள்ளனர். அதாவது கதிர் மனைவியான முல்லையின் மருத்துவச் செலவால் ஏற்பட்ட பணப்பிரச்சினையால் கதிர் வீட்டை விட்டு சென்று விடுகின்றார்.

இந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விட்டது. மூர்த்தி ஆபரேஷன் செலவிற்கு மீனா அப்பா உதவுகிறார். அதற்குள் தனம் அம்மா மூர்த்தியின் இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம் என மீனா அப்பாவை மருத்துவமனையில் வம்புக்கு இழுக்கிறார்.

இதனால் தொடர்ந்து பல பிரச்சினைகளை இந்த சீரியல் சந்தித்து வருகின்றது. மேலும் சீரியலை தாண்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களான சுஜிதா, காவ்யா, குமரன், சரவணன் ஆகியோர் ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றுள்ளனர். ஆனால் அது யாருடைய நிகழ்ச்சி, ஒருவேளை சரவணனின் தங்கை திருமண நிகழ்ச்சியா என சரியாக தெரியவில்லை.

அனைவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் மட்டும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement