• Jul 24 2025

அச்சு அசல் சூர்யா போலவே மாறிய நபர்..ஷாக்கான ரசிகர்கள் - தீயாய் வைரலாகி வரும் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா தற்போது பிஸியாக கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் மிருணாள் தாகூர் படத்தில் இடம்பெறும் வரலாற்று காட்சியில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.

சூர்யாவின் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்திற்கு பின் இவர் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், கேமியோ ரோலில் வில்லனாக வந்து மிரட்டிய படம் தான் விக்ரம்.

வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றி செம மாஸ் காட்டிவிட்டார். இதனால் இவர் நடித்த ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.அடுத்ததாக எப்போது இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை திரையில் பார்க்க போகிறோம் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், நபர் ஒருவர் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கெட்டப்பில் எப்படி இருந்தாரோ அதே போல மேக்கப் போட்டு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். அச்சு அசல் பார்பதற்கு அப்படியே சூர்யா போலவே தோற்றமளிக்கிறார்.அதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement