• Jul 25 2025

நடிகைகளை மிஞ்சுமளவிற்கு போஸ் கொடுத்த பாவனா... அதுவும் மார்டன் உடையில்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

காலத்திற்கு காலம் தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.



குறிப்பாக டிடி தொடங்கி சமீபத்தில் வந்த ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் பட்டியல் ஏராளம். அந்தவகையில் விஜய் டீவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் பாவனா.



இவர் ஒரு கால கட்டத்தில் விஜய் டீவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக களை கட்டி வந்தார். அதிலும் குறிப்பாக விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்', 'ஜோடி' போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.



இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார். அந்தவகையில் பாவனா அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வாரி வழங்கி வருகிறார். அதில் வித்தியாசமான உடைகளை அணிந்து ரசிகர்களின் கண்ணுக்கு விருந்து அளிப்பார். இந்நிலையில் தற்போதும் இவரால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement