• Jul 24 2025

ஜெசியை கைது செய்த போலீசார்.. சிவகாமி எடுத்த முடிவு...ராஜா ராணி 2 இன்றைய எபிசோடு அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜா ராணி-2.விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்ன என்பதை பார்ப்போம்...

ஜெசியை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருக்க சிவகாமியின் உட்பட எல்லோரும் என் குடும்பத்தில் மட்டும் ஏன் தான் இப்படி நடக்குது என புலம்பிக்கொண்ட ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.

என்னாச்சு எதுக்கு ஜெஸ்ஸியை இப்படி கூட்டிட்டு வந்து உட்கார வச்சிருக்கீங்க என்ன கேட்க போலீஸ் இந்த அம்மா நகை காணும்னு கம்பெனி கொடுத்து இருக்காங்க என சொல்ல அப்போது ஆதியும் வந்து ஜெசிக்கு என்ன ஆச்சு எனக்கு கேட்க நகை காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக தெரியவர ஆதி நான் தான் இந்த நிலைமைக்கு காரணமா என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். 


இதனையடுத்து ஆதி அவ கர்ப்பமா வேற இருக்கா, அவள விட்டுடுங்க என போலீசிடம் கெஞ்ச அப்போது போலீஸ் வேணும்னா நான் உங்களுக்காக ஒன்று பண்றேன் ஒன்னு நகை திருப்பி கொடுங்க இல்லனா அந்த நகைக்கு ஈடான பணத்தை கொடுங்க என கூறுகின்றனர்.

இதனால் ஆதி சரவணன் உட்பட இருவரும் பணத்தை தயார் செய்ய தெரிந்தவர்களுக்கு போன் போட எதுவும் நடக்காமல் போகிறது. அத்தோடு  போலீஸிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க அதுவரைக்கும் ஜெஸ்ஸி இங்கேயே இருக்கட்டும் என சொல்ல சிவகாமி கழுத்தில் இருக்கும் செயினை கழட்டி கொடுத்து ஜெஸ்ஸியை வீட்டுக்கு வருகிறார்கள்.

அதன் பிறகு  கௌரி மேடம் பயிற்சியாளர்களுக்கு மேப் கொடுத்து அவர்களை காட்டு வழியாக புது கேம்ப்பிற்கு வரவேண்டும் என கூறுகிறார். அடுத்து ஒவ்வொருவரும் காட்டு வழியாக தனித்தனியாக செல்ல ஜோதி மயங்கி விழுந்து விடுகிறார்.இதனையடுத்து சிவகாமி வீட்டில் கையில கொஞ்சமா காசு சேர்த்து வையுங்க இல்லனா இன்னைக்கு தான் நிக்கணும் என அறிவுரை கூறுகிறார். இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.




Advertisement

Advertisement