• Sep 10 2025

அடுத்த ஆதி குணசேகரனாக களமிறங்கும் பிரபல நடிகர்... மீண்டும் சூடிபிடிக்கப் போகும் 'எதிர்நீச்சல்' சீரியல்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர் நீச்சல்' தொடரானது எப்போதுமே முன்னிலை வகிக்கும் ஒரு சீரியலாக இருந்து வருகின்றது. பெண் அடிமைத்தனத்தைக் கதைக்களமாக கொண்ட இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகர்கள் அனைவருமே ஏதோ ஓர் வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். 


அந்தவகையில் இந்த சீரியலில் உள்ள அத்தகைய ஒரு அருமையான கதாபாத்திரம் தான் குணசேகரன். இந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வருகின்றார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.


அதாவாது ஆதி குணசேகரனாக இவரின் நடிப்புக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ட்ரெண்ட் ஆகின. அதிலும் குறிப்பாக இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியது.


இந்நிலையில் இவரின் திடீர் உயிரிழப்பானது சீரியல் குழுமத்திற்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் ஒரு பேரிழப்பாகப் பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து 'எதிர்நீச்சல்; சீரியலில் அடுத்த ஆதிகுணசேகரன் யார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மாரிமுத்து நடித்து வந்த இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement