• Jul 25 2025

ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கவுள்ள பிரபல நடிகர்- அதுவும் என்ன கதாப்பாத்திரத்தில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே 2.இந்த சீரியலில் காதலித்தவனை விட்டு வேறொருவரை திருமணம் செய்தால் அவர்களின் மனநிலை மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என அழகாக காட்டி வருகிறார்கள்.

ஆனாலும் முதல் பாகத்தை போலவே அண்ணன் தம்பி ஒரே வீட்டில் பிறந்த அக்கா தங்கையை கல்யாணம் செய்வது போன்று தான் இந்த பாகமும் இருக்கிறது. அதுபோல முதல் பாகத்தில் நடித்த நடிகர் திரவியம் இரண்டாவது சீசனிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இப்போது இந்த சீரியலின் கதைப்படி கவியா கர்ப்பமாகியுள்ளார். இதனை பார்த்திபனுக்கு சொல்லாமல் முதலில் ஜீவாவுக்கு தான் காவியா சொல்லி இருக்கின்றார் என தேவி கதை கட்டி விட்டதால் ப்ரியா ஜீவா மீது சந்தேகத்தில் இருக்கின்றார். இதனால் ஜீவாவிடம் தனிக் குடித்தனம் போய்டுவோம் என்றெல்லாம் கூறுகின்றார்.


அத்தோடு தனிக் குடித்தனம் போவது பற்றி தன்னுடைய மாமாவிடமும் சொல்லி விட்டார். இப்படியான நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலில் தற்பொழுது தருண் அப்பாசுவாமி என்பவர் கவின் என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement