• Jul 23 2025

ரயிலில் சென்னையை வலம் வரும் 'வாரிசு' பட போஸ்டர்... ப்பா வேற லெவலில் இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதாவது பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது. 

வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷியாம், குஷ்பு, பிரகாஷ்ராஜ், பிரபு, சங்கீதா, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதுமட்டுமல்லாது தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் வாரிசு படத்தை தயாரித்து இருக்கிறார். 


மேலும் தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் டப்பிங் செய்து பிரமாண்டமாக வெளியிட உள்ளனர். அந்தவகையில் வாரிசு படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தான் தமிழகத்தில் வெளியிட உள்ளார்.

அத்தோடு தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இவ்வாறான வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ ரெயில் மூலம் வாரிசு படத்தை வேறலெவலில் புரமோட் செய்து வருகின்றனர். அதாவது இதற்காக சென்னை மெட்ரோ ரெயில் முழுவதும் வாரிசு படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, சென்னை முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. 

இவ்வாறு சென்னை மெட்ரோ ரெயிலில் வாரிசு பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் அதனை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement