• Jul 25 2025

“பத்து தல’’ படத்திற்கு வந்த சிக்கல்...சோகத்தில் ரசிகர்கள்..இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில்  தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழும் நடிகர் சிம்பு.இவரின்  மாநாடு படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த படங்களில் ஒன்றாக மாறிய நிலையில், மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கதைகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு.


கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் உடல் இளைத்து 20வயது இளைஞன் போல வித்தியாசமாக காணப்பட்டார் சிம்பு.மேலும்  இந்தப் படமும் சிம்புவிற்கு மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது.

அத்தோடு  மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன மஃப்ட்டி படத்தின் ரீமேக் தான் இப்படம். நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக வெளியான மஃப்ட்டி படத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தார்.

இந்த படம் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றதையடுத்து, இப்படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் உருவாகி வருகிறது.மேலும்   இதில் சிம்பு, இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சிம்பு ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.


அதாவது சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுமையாக முடிவடையாததால் அடுத்த மாதம் படம் வெளியாவது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு  சிம்புவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். பெங்களுக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement