• Jul 25 2025

ஹாஸ்பிட்டலில் கண்ணீர் விட்டு அழும் சாரதா.. 'அம்மா'ன்னு ஆறுதல் கூறும் சூர்யா.. அதிரடித் திருப்பத்துடன் வெளிவந்த ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி. இந்தக் கதை எந்தளவிற்கு மக்கள் மனதைக் கவர்ந்திருக்கின்றதோ, அந்தளவிற்கு இதில் நடிப்பவர்கள் நடிப்பும் பலரையும் பிரமிக்கத்தக்க வைத்திருக்கின்றது.

இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் இனிமேலும் சும்மா இருக்கக் கூடாது அம்மா ரூமுக்கு போய்ட்டு அம்மா என்று கூப்பிடுவோம் என சூர்யா சாரதாவின் ரூமைத் தட்டுகின்றார்.ரொம்ப நேரமாக கதவு தட்டியும் எந்தப் பதிலும் இல்லை.


அந்த சமயத்தில் சாராதாவிற்கு உடலில் வலி ஏற்பட்டு மயக்கம் வருவது போல் உணர்கின்றார். உடனே சூர்யா கதவைத் திறந்து என்ன ஆச்சு என உள்ளே நுழைந்து பார்க்கும் போது, சாரதா மயங்கி விழுவது போல் ஹாஸ்பிடல் கொண்டு செல்லுமாறு கூறுகின்றார். ஐயோ என்னாச்சு என பதறிக்கிட்டே அழுதுகிட்டே ஹாஸ்பிடலிற்கு கொண்டு செல்கின்றார் சூர்யா.


பின்னர் சிறிது நேரம் கழித்து "நீ மட்டும் இல்லை என்றால் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்" என சாரதா கூறுகின்றார். அதற்கு சூர்யா" இனிமேல் நீங்க அந்த மாதிரி ஒரு வார்த்தையை சொல்லக் கூடாது, நான் இருக்கேன் உங்களுக்கு" எனக் கூறுகின்றார். 


Advertisement

Advertisement