• Jul 26 2025

ஆரம்பமானது Ticket to finale டாஸ்க்... நேருக்கு நேர் மோதும் போட்டியாளர்கள்.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சேனல்களில் ஒன்றாகிய விஜய் டிவியில் 85 நாட்களைக் கடந்து பிக்பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் மணிகண்டன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அந்தவகையில் அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, சிவின், கதிர் என எட்டு  போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் டிக்கெட்டு பினாலே டாஸ்க் நடைபெறுகின்றது. அந்தவகையில் 2ஆவது டாஸ்க்காக விவாதம் இடம்பெறுகின்றது. அதாவது நேருக்கு நேராக 2பேருக்கு இடையில் அந்த டாஸ்க் இடம்பெறுகின்றது. 

அதில் அசீமிற்கும் ரச்சிதாவிற்கும் இடையில் விவாதம் இடம்பெறுகின்றது. அதேபோல் விக்ரமனுக்கும், கதிரவனும் நேருக்கு நேர் மோதுகின்றார். அதில் கதிரவன் விக்ரமனைப் பார்த்து நான் தான் உங்கள விடப் பெஸ்ட் எனக் கூறுகின்றார். 

அதேபோல் அமுதவாணனுக்கும், மைனாவிற்கும் இடையில் விவாதம் இடம்பெறுகின்றது. அதேபோல் ஏடிகே வும் ஷிவினும் மோதுகின்றனர். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement