• Jul 26 2025

கதறி அழுத ஷிவின்-பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை-பரபரப்புடன் வெளியான ப்ரமோ...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, 50 நாட்களைக் கடந்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது .

இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரை 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். மீதம் 14 போட்டியாளர்கள்  இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் கடும் போட்டிகளுக்கு நடுவில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் இந்த வார டாஸ்கின் படி இரண்டு அணிகளாக பிரிந்து ஒருகுழு பழங்குடி மக்களாகவும் மற்றொரு குழு ஏலியன்களாகவும் விளையாட வேண்டும் என்று கூறப்பட்டது.அதன் படி இருகுழுக்கலாக பிரிந்த வேளையில் ஏலியன் குழுவில் தனலட்சுமியும் பழங்குடி மக்கள் குழுவில் ஷவினும் உள்ளார்.

இவ்வாறு விளையாடிக் கொண்டு இருக்கும் போது டாஸ்கிற்காக ஷவினின் அம்மாவை பற்றி தவறான கருத்தை முன்வைத்துள்ளார் தனலட்சுமி.இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இதைப்பற்றி பேச வேண்டாம் .இதுக்காக என் அம்மாவை பற்றி பேசுவாயா..எனக் கோபமாக கூற... டாஸ்க் ஷவின் இது.... என சிரித்தபடியே தனலட்சுமி கூறுகின்றார்.மறுபடியும் தாங்கிக்கொள்ளாத ஷவின் இதைப் பற்றியே பேசிட்டு இருக்கும் போது சிரித்த படியோ பதில் கூறுகின்றார் தனலட்சுமி.

இதனால் பாத்ரூமில் சென்று கொண்டு கதறி அழுகிறார் ஷவின்.இவ்வாறு பரபரப்புடன் இன்றைய முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement