• Jul 25 2025

பதான் பட போஸ்டர்களை கிழித்து அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்- தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியோ அதேபோல் தான் நடிகர் ஷாருக்கான். அவரது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே ஹிந்தி சினிமாவை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்ப்பார்ப்புடன் படத்தை வரவேற்பார்கள்.

எனினும் தற்போது ஷாருக்கான் கொரோனா போன்ற பிரச்சனைகளுக்கு பிறகு நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்க ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.


தற்போது படத்தில் இருந்து ஒரு ஸ்டில் வெளியாக இப்போது அது பிரச்சனையாக அமைந்துவிட்டது.அத்தோடு  தீபிகா படுகோனே காவி நிறத்தில் அரைகுறையாக உடை அணிந்து நடிக்க அதெப்படி இந்த நிறத்தை பயன்படுத்தலாம் என பிரச்சனை எழுந்திருக்கிறது.

Bajrang Dal என்ற குழுவினர் அஹமதாபாத்தில் உள்ள ஒரு மாலில் வைக்கப்பட்ட பதான் போஸ்டர்களை கிழித்து உதைத்து அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோ வெளியாகி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















Advertisement

Advertisement