• Jul 25 2025

அது நடக்கக் காரணம் சிம்பு தான்... ஓப்பனாக போட்டுடைத்த விக்னேஷ் சிவன்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் திறமைவாய்ந்த இயக்ககுநராக பிரபலமானதை விட, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவனாக உலகம் பூராகவும் அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களில் ஹிட் பாடல்களை எழுதி பிரபலமான பாடலாசிரியராக இருந்து வருகிறார்.


அந்தவகையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே தத்தமது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவன் பல சுவாரசிய தகவல்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். அதில் சிம்பு பற்றியும் கூறியுள்ளார். அதாவது போடா போடி திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது சிம்பு விக்னேஷ் சிவனிடம் பாடல்களை எழுதுமாறு ஊக்குவிப்பாராம். இதனால் தான் தனக்கு பாடல்கள் எழுத நம்பிக்கை வந்ததாக சிம்புவைப் பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

Advertisement

Advertisement