• Jul 25 2025

ஜோதிகா மற்றும் மம்முட்டி நடிக்கும் காதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 25 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை தான் ஜோதிகா.இவர் தற்பொழுது  நடித்து வரும் படங்களில் ஒன்று ’காதல்’. இந்த படத்தின் நாயகனாக மம்மூட்டி நடித்து இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சற்றுமுன் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 20-ம் தேதி பக்ரீத் விடுமுறை தினத்தின் போது வெளியாகும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை  ஜோபேபி இயக்கி உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சூர்யா இந்த படத்தின் குழுவினர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ‘இந்த படத்தில் ஐடியா மற்றும் ஒவ்வொரு பணிகளையும் நான் முதல் நாளில் இருந்தே கவனித்து வருகிறேன்.


 இயக்குநர் ஜோபேபி மிகவும் சூப்பராக செயல்பட்டு வருகிறார். மம்முட்டி, ஜோதிகா மற்றும் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தார். கடந்த 1990 இல் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு மாத்யூஸ் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement