• Jul 23 2025

லியோவில் சம்பவம் செய்திருக்கும் சாண்டி மாஸ்டர்! ட்ரெண்டாகும் புகைப்படம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய்யின்  'லியோ' திரைப்படம்  நாளை  உலகெங்கிலும் வெளியாக உள்ளது.  இது  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், லியோ படத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டரின் புதிய லுக் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதுமட்டுமின்றி ட்ரெய்லர் ஓப்பனிங்கில் சாண்டி மாஸ்டரின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அட்டகாசமாக அமைந்துள்ளது.


அந்த ட்ரெய்லரில்  சாண்டியை லோகேஷ் எப்படி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு சாண்டி மாஸ்டரின் சில நொடி அப்பியரன்ஸ் போதுமானதாக அமையப்பெற்றுள்ளது.இந்நிலையிலேயே தான் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்படத்தில் கையில் ரிவால்வருடன் டெவில் சிரிப்போடு நீல கண்களோடு காட்சியளிப்பதோடு,  அந்தப் படத்துக்கு கேப்ஷனாக ' Keep calm and wait for Chocolate Coffee' என குறிப்பிட்டிருக்கிறார். 

சாண்டியின் இந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது பெரிதும் ட்ரெண்டாகியுள்ளது. 

Advertisement

Advertisement