• Jul 24 2025

2ஆவது திருமணம்..? 'நல்ல எதிர்காலத்தை அமைப்பது தான் முக்கியம்'.. கண் கலங்கியபடி கல்யாணம் குறித்து கூறிய மீனா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா.


சினிமாவில் பிஸியாக வலம் வந்த மீனா 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். இருப்பினும் எதிர்பாராத விதமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் புறாக்களின் எச்சத்தால் ஏற்படும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்தாண்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். 


இந்நிலையில் சமீபகாலமாக மீனா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அடிக்கடி சில வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் கூட நடிகர் தனுஷை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறி இருந்தார்.


இவ்வாறு பரவும் வதந்திகளுக்கு முதல்முறையாக மீனா தன்னுடைய பேட்டி ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது அதில் அவர் கூறுகையில் "என்னுடைய கணவர் இல்லை என்பதையே இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்குள் எப்படி இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகிறது என்பது என்னால் தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் திரைப்படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அதேபோல் எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவது தான் எனக்கு மிகவும் முக்கியம்" என கூறியுள்ளார் மீனா.

Advertisement

Advertisement