• Jul 25 2025

முடிவுக்கு வரும் ரியல் ஜோடியின் சீரியல்கள்- அடடே இந்த சீரியல்களா?- இருவரும் ஒரே சீரியல்களில் நடிக்கப் போறாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சமீபகாலமாக பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து வருவது அதிகரித்து வருகின்றது.அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா.

இவர்கள் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்னும் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு இந்த சீரியல் மூலம் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.


இதனை அடுத்து சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகின்றார். ஸ்ரேயா ஷீ தமிழில் ஒளிபரப்பாகும் ரஜினி என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இருவரும் நடித்து வரும் சீரியல்கள் இரண்டும் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் எப்போ அடுத்த சீரியலில் வருவீங்க எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement