• Jul 24 2025

குணசேகரனிற்கு எஸ் கே ஆர் தம்பிகளால் காத்திருந்த அதிர்ச்சி...எல்லாம் அப்பத்தாவின் பிளான் தானே...நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளது.அந்தவகையில் அதில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

அதாவது ஆதிரையின் நிச்சயதார்த்த விஷயங்களை பற்றி பேசுவதற்கு எஸ்கேஆர் இன் தம்பிகள் குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்பொழுது விசாலாட்சி அம்மா அரசு விடம் உங்களுக்கு என்னென்ன வேணும் என்று நீங்கள் கேளுங்கள் என்று கேட்கிறார்.


அதற்கு அரசு அதைக் கேட்டு முடிவு பண்ணுவதற்கு தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் நீங்கள் நினைத்தபடி நிச்சயதார்த்த வேலைகளை பற்றி நான் எதுவும் கேட்கப் போவதில்லை என்று கூறுகின்றார். உடனே குணசேகரன் வேற என்ன வேணும் என்று கேட்கிறார். அப்பொழுது அரசு மொத்த சொத்தில் ஐந்து பங்கு உள்ளது. அதில் ஆதிரைக்கும் ஒரு பங்கு வரவேண்டும் என்று கேட்கிறார்.

இதை எதிர்பார்க்காத குணசேகரன், ரொம்பவும் டென்ஷன் ஆகி வார்த்தையை கொஞ்சம் என்ன பேசணும்னு யோசிச்சு பேசுங்க என்று சொல்கிறார். இதன் பின்பு எஸ்கேஆர் தம்பி அருண் எங்க அண்ணன் கேட்டது சரிதான் எனக்கு அதில் உடன்பாடு இருக்கிறது என்று கூறுகிறார். ஆனாலும் அரசு இந்த மாதிரி கேட்டது யாராலும் எதிர்பார்க்க முடியாததாக இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக இவர் சொத்துக்காக இந்த மாதிரி பேசக்கூடிய ஆள் கிடையாது.

இவருக்கு பின்னாடி இந்த பிளான் போட்டுக் கொடுத்தது அப்பத்தாவாகத் தான் இருக்கும். எனினும் இதற்கு குணசேகரனின் முடிவு என்னவாக இருக்கும் கண்டிப்பாக 40% சொத்துக்காக இதுக்கு ஓகே தான் சொல்லப் போகிறார். அடுத்து இதையெல்லாம் பார்த்து சக்தி, ஜனனிடம் எல்லாரும் அவங்க அவங்க தேவைகளை பற்றி யோசிக்கும் போது நாம் மட்டும் ஏன் நம்ம வாழ்க்கை பற்றி யோசிக்காமல் கஷ்டப்படணும் என்று கேட்கிறார். இவர் கேட்டதும் சரிதான் இதற்கு ஜனனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement