• Jul 25 2025

தமிழை அவமானப்படுத்த வந்த அர்ஜுனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- கோதையிடம் உண்மையை மறைத்த சரஸ்வதி- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் அடைவு கடையில் சரஸ்வதியின் கம்மலை அடைவு வைத்து விட்டு 25 ஆயிரம் ரூபா பணத்தை வாங்குகின்றார். மறுபுறம் சரஸ்திக்கு கவரிங் கம்மலைக் கொண்டு வந்து வசு கொடுத்து விட்டு எதற்காக இந்தக் கம்மலைப் போடுறீங்க என்று கேட்கின்றார். அப்போது சரஸ்வதி தமிழிடம் கம்மலை அடைவு வைக்க கொடுத்த விஷயத்தைச் சொல்கின்றார்.


அத்தோடு தமிழ் ஒருவருக்கு காசு கொடுக்கனும் என்று சொன்னதும் எனக்கு என்ன பண்ணுறது என்று தெரில, அதான் நானே கொடுத்தேன். அவராக எதுவுமே கேட்கல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கோதை வருகின்றார். அப்போது சரஸ்வதியிடம் கம்மல் எங்கு என்று கேட்க சரஸ்வதி ஏதேதோ சொல்லி சமாளிக்க கோதை வசுவிடம் கேட்கின்றார்.

அப்போது வசு தமிழ் மாமா தான் வாங்கிட்டு போயிட்டாரு, கம்பெனில யாருக்கோ பணம் கொடுக்கனுமாம் என்று சொல்ல கோதை தமிழைத் தேடி கம்பெனிக்கு போகின்றார். அங்கு போய் தமிழிடம் பேசப்போக எல்லோரும் வந்து விட்டதால் தமிழ் கம்பெனி ஓனர்களிடம் சென்றுபேசுகின்றார். அப்போது அவர்கள் எல்லோரும் 25 ஆயிரம் கொடுத்ததால் ஆப்பிரேஷனுக்கு தேவையான பணம் சேர்ந்து விட்டதாக சொல்கின்றார்கள்.


இதனால் கோதை சந்தோசப்பட்டதோடு தமிழை நினைத்து தான் பெருடைப்படுவதாகவும் கூறுகின்றார். அத்தோடு தங்களுடைய கஷ்டத்தைப் பற்றியும் சொல்கின்றார். இதனால் இப்படியான சூழ்நிலையிலும் தமிழ் உதவி செய்ததை நினைத்து எல்லோரும் சந்தோசப்படுகின்றனர். தொடர்ந்து தமிழ் தனக்கு பணம் தருவதாக சொன்ன ஓனரைச் சென்று பார்க்கின்றார்.

ஆனால் அந்த ஓனர் தமிழைக் கண்டதும் மறைந்து கொள்கின்றார். இதனால் தமிழ் என்ன செய்யதென்று தெரியாமல் வீட்டுக்கு வருகின்றார். வீட்டுக்கு வந்ததும் பணம் கட்ட வேண்டிய கடைசி நாள் இன்டைக்கு தான். என்ன செய்யிறதென்றே தெரில என்று கூறிக்கொண்டிருக்கும் போது அர்ஜீன் வந்து பணத்தை நான் கொடுக்கிறேன் என்று வெறுப்பேற்றுகின்றார்.


இதனால் தமிழ் அர்ஜுனைத் திட்டிக் கொண்டிருக்க அங்கு சின்ன கம்பெனி ஓனர்ஸ் வந்து நீங்க கட்ட வேண்டிய பணத்தை நாங்க கட்டிட்டோம் என்று சொல்ல எல்லோரும் சந்தோசப்படுகின்றனர். அத்தோடு நீங்க எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவிகள் செய்திருக்கிறீங்க, இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி தமிழைப் பற்ற பெருமையாகப் பேச தமிழ் அவர்களைக் கட்டிப் பிடிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement