• Jul 24 2025

ஆன்லைனில் பர்கர் ஆடர் பண்ணிய ராஷ்மிகாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.. அதற்குப் பதில் என்ன வந்திச்சுத் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் உடைய இண்டர்நேஷனல் கிரஷாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமாவைத் தாண்டி ராஷ்மிகா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் அல்லது வேடிக்கையான வீடியோக்களை வெளியீட்டு படு ஆக்டிவாக இருந்து வருகிறார். 


இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதாவது ஆன்லைன் மூலம் ராஷ்மிகா, பர்கர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக மணி நேர கண்ணாடி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.


மேலும் பர்கரை ஆர்டர் செய்துவிட்டு அதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து பார்சலை பிரித்த ரஷ்மிகா ஏமாற்றத்துடன், சற்று அதிர்ச்சியானார். மேலும் இதற்கு என்ன அர்த்தம் என கேள்வி ஒன்றினையும் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஆனது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement