• Jul 25 2025

ராத்திரிக்கு வாறீங்களா..? பிக்பாஸ் பிரபலத்தை அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்த பிரபல நடிகை.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சினிமாவில் நடிகைகளை மட்டுமே டார்கெட் செய்து அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை நடைபெற்று வருவதாக பல்வேறு நடிகைகளும் கூறி வரும் நிலையில், இதேபோன்று சில நடிகர்களும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சினையில் சிக்கி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகராக வலம் வரும் ரவி கிஷனுக்கும் இதுபோன்ற ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தற்போது வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுகுறித்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் Casting Couch பிரச்சனை ஏற்பட்டதாக கூறி உள்ளார். அதுமட்டுமல்லாது அப்படி செய்தது ஒரு பிரபல நடிகை தான் என்று அவர் வெளிப்படையாக கூறியிருப்பது திரைத்துறையையே அதிர வைத்துள்ளது.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில் "சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றனர்.

பெண்களுக்கு மட்டும் தான் சினிமாவில் இது போன்று பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் இருப்பதாக பார்த்தால் நடிகர்களுக்கும் அதை விட மோசமாக சினிமா ஹீரோயின்களே டார்ச்சர் கொடுகின்றனர்" என திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் ரவி கிஷன்.


மேலும் "ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு நான் உடனே வேண்டாம் என மறுத்தேன்.

இருப்பினும் அந்த நடிகை விடாமல் என்னை விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் எனக்கு அந்த சமயத்தில் நினைவுக்கு வந்தது. 


இவ்வாறு நான் அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, "வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவர் மிகப்பெரிய பிரபலம்" என கூறி ரவி கிஷன் அந்த நடிகையின் பெயரை சொல்ல மறுத்து விட்டார். 

மேலும் இந்தி பிக்பாஸ் சீசன் 1லும் இவர் போட்டியாளராக ரவி கிஷன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் ஒரு ஆணுக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சினை நடந்துள்ளது என்ற விடயமானது பலரையும் பேரதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement