• Jul 26 2025

கண்ணான கண்ணே சீரியலில் ஏற்பட்ட ஷாக் காட்சி -திடீரென இறந்த பிரபலம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது சன் தொலைக்காட்சியாகும். இதில் இதுவரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சீரியல் தான் கண்ணான கண்ணே.

இந்த சீரியலில் நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நித்யா தாஸ், ராகுல் ரவி, நிமிஷிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில், கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷ்கா நடித்து வருவதோடு ஏராளமான ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார்.

மேலும் டிஆர்பியில் கண்ணான கண்ணே சீரியல் தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் இருந்து வருகிறது. மீரா கர்ப்பமாக இருப்பது போல தான் இனி கதை நகரும் என தெரிகிறது.

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலில் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் வர இருக்கிறது. ஒரு முக்கிய கதாபாத்திரம் இறந்துவிட்டதால் அவரை எரிக்கும் காட்சியை படமாக்கி இருக்கின்றனர்.

மேலும் அதன் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், யார் இறந்தது என்று தான் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement