• Jul 24 2025

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தை ஓட ஓட கல்லால் விரட்டியடித்த பாடகி- என்ன காரணம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நான்கு தலைமுறைக்கு பாடல் பாடிய பெருமைக்குரியவர் தான் எஸ்பி பாலசுப்பிரமணியம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில், பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். எம்ஜிஆர் தொடங்கி ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜூக்கு பாடினார். அதன்பிறகு அஜித், சூர்யாவுக்கு பாடினார். அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளில் வந்த புதுமுக நடிகர்களுக்கும் பாடியுள்ளார்.

இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கொரோனா பாதிப்பால்,இறந்தார்.இசை உலகில் ஜாம்பவனாக இருந்த எஸ்பிபி, பழகுவதற்கு மிக எளிமையானவர். எந்த இடத்திலும், இயல்பாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர்.சமீபத்தில் ஒரு மேடையில் அவர் பேசிய வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


அந்த வீடியோவில் பாடகர் மனோ, பாடகிகள் சித்ரா மற்றும் எஸ்.ஜானகி ஆகியோர் எஸ்பிபி அருகில் நிற்கின்றனர்.அவர்கள் மத்தியில் பேசும் எஸ்பிபி என்னை பலரும் பாலு, எஸ்பிபி என அழைப்பார்கள். இந்த பெயரில் என்னை யாரும் அழைத்ததே இல்லை. என்னை ஜானகி அவர்கள், சுப்பிரமணியம் என்றுதான் அழைப்பார். சந்தோஷமாக கூப்பிட்டாலும், கோபமாக பேசினாலும் சுப்பிரமணி என்றுதான் கூறுவார்.

என்னை திட்டுவதாக இருந்தாலும் சுப்பிரமணிதான். கோபத்தில் என் மீது கையில் இருப்பதை எல்லாம் வீசி எறிவார். பலமுறை என்னை இப்படி அடித்திருக்கிறார். கையில் கல் இருந்தாலும், அதை தூக்கி வீசி அடித்து விடுவார். ஆனாலும், இந்த பெண்மணி மீது எனக்கு ஏகப்பட்ட அன்பும், மரியாதையும் இருக்கிறது, என்று எஸ் ஜானகியின் தோளை பற்றி தன் அன்பை உணர்த்துகிறார் எஸ்பிபி.


 இடையிடையே எஸ்பிபி பேச்சுக்கு ஆதரவளித்து, எஸ் ஜானகியும் பேசும் இந்த காட்சி, இசை உலக ஜாம்பவான்களான இவர்களது அன்பும், அவர்களுக்குள் இருந்த புரிதலும் பண்பும் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.மேலும் ரசிகர்கள்  எஸ்பிபியை மிஸ் செய்து வருவதாகவும்கூறி  வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















Advertisement

Advertisement