• Jul 24 2025

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் வலம் வரும் நடிகர் பிரபாஸ். தெலுங்கில் மாததிரமல்லாது தமிழிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இவரது நடிப்பில் இறுதியாக  ராதேஷ்யாம் திரைப்படம் வெளியானது.

இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்று தான் கூற வேண்டும் இதனை அடுத்து கே.ஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) செப்டம்பர் 28-ம் தேதி ரிலீஸாக தயாராகி வருகிறது. 


அடுத்ததாக பாலிவுட்டில் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பிரபாஸ், ப்ராஜக்ட் கே எனும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இது தவிர இயக்குநர் ஓம் ராட் இயக்கத்தில் ராமாயணத்தை கதைக்களமாகக் கொண்டு ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ஆதிப்ருஷ். ராமராக பிரபாஸ் நடிக்கும் ஆதிப்ருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கிறார். 

ஹனுமான் கதாபாத்திரத்தில் தேவ்தத்தா நாகே நடிக்கிறார்.இப்படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின்  அட்டகாசமான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement