• Jul 26 2025

வெள்ளித்திரையில் களமிறங்கிய சாம்ஸ்ஸின் மகன் – புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள் .அதில் விஜய் ,சூர்யா துவங்கி விக்ரம் மகன் துருவ் வரை தமிழ் சினிமாவில் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள்.அத்தோடு, சமீப காலமாகவே தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட அருண் விஜய்யின் மகன் சூர்யா தயாரிக்கும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஹீரோக்களின் வாரிசு ஒரு பக்கம் நடிகர்களாக களமிறங்கினாலும் இன்னொருபக்கம் காமெடி நடிகர்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.நாகேஷ் துவங்கி தம்பிராமையா, எம் எஸ் பாஸ்கர் வரை பல்வேறு காமெடி நடிகர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கின்றனர். அத்தோடு அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் மகனும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சாம்ஸ்.மேலும் அந்த படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடித்திருக்கிறார்.அத்தோடு  இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் மகன் என்று தான் பலரும் நினைத்தார்கள். பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ஒரு சில படங்களில் இவர் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் கூட இவரது காமெடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறது.

மேலும் இப்படி ஒரு நிலையில் இவரது மகன் யோகன் தற்போது சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். எனினும் தற்போது இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும், சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பயிற்சியையும் முடித்துள்ளாராம் யோஹன்.



இவ்வாறுஇருக்கையில் தற்போது நடிகராக களம் இறங்க தயாராகி விட்டதாக நடிகர் சாம்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்து இருக்கும் சாம்ஸ்


எனது மகன் “யோஹன்” – “FALL” என்ற வெப் சீரிசில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கியுள்ளார்.ஒளிப்பதிவாளராக பல வெற்றி படங்களை தந்த திரு சித்தார்த் அவர்கள் முதல் முறையாக இயக்கி, அஞ்சலி அவர்கள் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.இது Disney+ Hotstarல் வருகிற டிசம்பர் 9’ம் தேதி வெளியாகவுள்ளதுஅதன் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.என தெரிவித்துள்ளார்.


இந்த பதிவை பார்த்து பலரும் வாழ்த்து கூறிய நிலையில் சிலர் அவரின் மகனின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கடைந்துள்ளனர்.அதாவது அவரே மாதிரி இருக்கிறாரே எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement