• Jul 23 2025

'ஜெயிலர் கதை படு சொதப்பல்'.. நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள்?..மீண்டும் பஞ்சாயத்து ஸ்டார்ட்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பீஸ்ட்டில் வாங்கிய அடியை இதன் மூலம் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு நெல்சனும், இரண்டு படங்களில் சறுக்கியதை இதன் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் ரஜினிகாந்த்தும் பணியாற்றியிருக்கின்றனர்.

பெரிய எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் படம் வருவதால் அவரது ரசிகர்கள் இதனை ஒரு திருவிழா போலவே கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர். கட் அவுட்டுகள், பேனர்கள் என திரையரங்குகள் கலைகட்டியிருக்கின்றன. 

படத்துக்கு பெரும்பாலானோரிடத்திலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தையும் கூறிவருகின்றனர். அதாவது ஜெயிலர் படத்தின் திரைக்கதை மோசமாக இருக்கிறது; கதை ஆங்காங்கே சொதப்பியிருக்கிறது. டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை. முதல் பாதி பரவாயில்லை ரகம். இரண்டாம் பாதி மோசம் என பதிவிடுகின்றனர்.

 இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை மனதில் வைத்துக்கொண்டு விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே ஜெயிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தை பரப்புகின்றனர். ஜெயிலர் படம் நல்லா இல்லை என்று சொல்பவர்களின் டிபியை பார்த்தால் அதில் விஜய்தான் இருக்கிறார். இதை வைத்தே அவர்கள் விஜய் ரசிகர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளலாம் என ரஜினி ரசிகர்கள் கமெண்ட்ஸில் பதிலடி கொடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்கத்து.


Advertisement

Advertisement