• Jul 26 2025

சமோசா கேட்டு திருமணத்தில் முடிந்த மகனின் கதை- எதிர்நீச்சல் சீரியல் நடிகை சத்தியப்பிரியாவின் இன்டர்வியூ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90களில் இருந்து தற்பொழுது வரை நடித்து வரும் நடிகை தான் சத்தியப்பிரியா. இவர் கதாநாயகியாக மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவருடைய மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் அவர்கள் கூறியதாவது ரவிக்கு சினிமாவில் நடிக்கணும் எனன்று ஆசையே கிடையாது.சின்ன வயசில இருந்து ரொம்ப படிப்பான்.இப்போ அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நாள் ரவி பசியுடன் ரெயினில் ஏறிச் சென்றுள்ளார்.


அப்போது அவருடைய மருமகள் சமோசா சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு ரவி போய் கேட்டாராம். இந்த சமோசாவைத் தாங்க நான் வேற சாப்பாடு வாங்கித் தாரேன் என்று அவங்க யாரோ ஒரு பைத்தியக்காரன் என்று தான் முதலில் யோசிச்சாங்களாம்.அதுக்கப்பிறம் கொடுத்திட்டாங்களாம். 

பின்னர் 3 மணிநேரமாக இருவரும் அந்த ரெயிலில் பயணிக்கும் போது இருவருக்கும் பிடிச்சிருச்சாம். முதலில் நண்பர்களாக இருந்து பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்களாம். இருவரும் காதலிக்கும் விடயத்தை கேட்டவுடன் சத்தியப்பிரியா ரொம்ப சந்தோசம் தான் அடைந்தார்களாம். வெளிநாட்டில் மகனைப் பார்த்துக் கொள்வதற்கு ஒருவர் இருக்கிறாரே என்று சந்தோசப்பட்டு திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம்.


பின்னர் வெளிநாட்டவரான அவருடைய மருமகள் பேசும் போது ரவி மிகவும் அமைதியானவர். யார் கிட்டையும் அதிகமாக பேசமாட்டாரு. ரொம்ப நல்லா பார்த்துக்கிறாரு. ரொம்ப சுதந்திரமாக இருக்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து இந்தியாவின் கலாச்சாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னுடைய மாமியாரும் ரொம்ப என்னுடன் கனெக்டாக இருக்கிறார். என்னை நிறைய அன்பு செய்கின்றார்.இதனால் இந்த லைப் பிடிச்சிருக்கு என்றும் எப்போதும் சுதந்திரமாக என்னுடைய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்



Advertisement

Advertisement