• Jul 25 2025

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்.. இரங்கல் தெரிவித்த நிதியமைச்சர்..!

rip
Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகரும், ஊடகவியலாளருமான ரங்கராஜ் பாண்டேயின் தந்தை மரணமடைந்துள்ளார்.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்திற்கு எதிராக நீதிமன்றத்தில் இவர் செய்யும் வாதங்கள், நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த க/பெ. ரணசிங்கம் படத்தில் தமிழ் குமரன் எனும் கலெக்டர் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார்.


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரங்கராஜ் பாண்டே தனது டிவிட்டர் பக்கத்தில் தனது தந்தை இறப்பு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அதில், "என் திருத்தகப்பனார் ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா @ ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று, வைகுண்ட ஏகாதசி, திங்கள் கிழமை, மார்கழி 18, 02.01.2023 இரவு 9:45 மணிக்கு ஆசார்யன் திருவடி அடைந்தார். அன்னாரது காரியங்கள் சென்னையில் செவ்வாய் கிழமை நடைபெற இருக்கின்றன.

அடியேன் ரங்கராஜ் பாண்டே" என குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

ராம்சிங்ஹாசன் பாண்டே மறைவுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், கார்த்திகை செல்வன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




 


Advertisement

Advertisement