• Jul 24 2025

மாவீரன் படத்தின் அசத்தல் அப்டேட் கொடுத்த படக்குழு...! உற்சாகத்தில் SK ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரின்ஸ் படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என அவர் நடித்த இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சூழலில் பிரின்ஸ் அடைந்த தோல்வி பேசுபொருளானது. எனவே மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாவீரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்கு சிவகார்த்திகேயன் தயாராக இருக்கிறார்.

 மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவித்தது. படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

 மாவீரன் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு சென்றார் சிவா. அந்தப் படத்தில் ராணுவ வீரராக அவர் நடிக்கிறார் என கூறப்படும் சூழலில் ஜிம்மில் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து வேறுமாதிரியான லுக்கில் வலம் வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில்தான் மாவீரன் படத்துக்கான டப்பிங் பணியை முடித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

இந்நிலையில் மாவீரன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி மாவீரன் படத்தின் ஓவர் சீஸ் உரிமையை பிரபல நிறுவனமான் ஹாம்சினி மற்றும் ஹகிம்சா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement