• Jul 24 2025

ஆதிபுருஷுக்கு வந்த சோதனை ...ஃபுல்லா பச்சையா இருக்கு? படத்தை நிராகரித்ததா தமிழ்நாடு?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள ஆதிபுருஷ் படம் இன்று உலகம் முழுவதும் அதிகளவிலான தியேட்டர்களில் வெளியாகி உள்ளன.டோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் அதிகாலை காட்சிகள் வெளியாகி தியேட்டர்கள் கொண்டாட்ட மோடில் களைகட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டில் டோட்டலாக ஆதிபுருஷ் படம் வெளியான தியேட்டர்களின் நிலையே டல் அடித்து காணப்படுகிறது.

தமிழ் சினிமா படங்களுக்கு கிடைத்த வரவேற்பை விட அதிகமாகவே ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்கு இங்கே வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்தி இயக்குநர் இயக்கத்தில் டோலிவுட் நடிகர் பிரபாஸ் நடித்து வெளியான ஆதிபுருஷ் படத்துக்கு தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பு இல்லை என்பது இனி வரும் பிரம்மாண்ட படங்களுக்கும் இதே போன்ற சூழலை உருவாக்குமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

சென்னையில் புக் மை ஷோவில் தியேட்டர்களின் நிலையை பார்த்தால் ஆதிபுருஷ் படத்துக்கு பல பிரபல திரையரங்குகள் அனைத்தும் பச்சை வண்ணத்தில் பல சீட்டுகள் புக் ஆகாமல் காலியாக கிடக்கின்றன.

ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ புக்கிங் மற்ற இடங்களில் ஃபயராக இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அந்த படத்துக்கு எந்தவொரு ஆதரவும் வரவேற்பும் இல்லாதது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்,



Advertisement

Advertisement